Pages

Friday 27 January 2012

தொலைந்துபோன காதலன்..


வெகுநேரம் ஆகியும் அன்று மட்டும் அவனை இன்னும் காணவில்லை...எவ்வளவு நேரம் தான் இன்னும் காத்திருப்பது..? வருவானா..? மாட்டானா? ஒரு தகவலும் இல்லையே.. வரட்டும்..இந்த முறை எத்தனை தடவை சமாதானம் படுத்தினாலும்,சமாதானம் ஆவதில்லை.. என்று நினைத்துக் கொண்டே வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்..

ஆறு மாதத்திற்கு முன்..

 வழக்கமாக நானும் என் தோழியும் அலுவல் முடித்து ஒன்றாய் வீட்டுக்குப் போவதுதான் வழக்கம்..என் அலுவலகத்துக்கு  வெளியே அனுதினமும் வந்து காத்திருப்பான்..எங்களைப்  பார்த்ததும் கேஸூவலாக நடப்பது போன்று நினைத்துக் கொண்டு எங்களை பின் தொடர்வான்..ஆரம்பத்தில் இதை நாங்கள் இருவருமே  கவனிக்க வில்லை..  ஆனால் நாட்கள் போக போக அவன் எங்களைத் தான் பின் தொடர்கிறான் என்பதை நான் உணர்ந்தேன்..

ஆறரைக் கோடி மக்கள் தொகையில், நாம்  மட்டும் ஒருவனால் பின் தொடரப் பட்டால் அதற்கு என்ன அர்த்தம் என்று அவனை பார்க்கும் போதெல்லாம் என் மனம் யோசிக்கும்..


ஒரு வேளை கொள்ளை கூட்டத் தலைவனாய் இருப்பானோ...? 


ஒரு வேளை இயக்குனர் ஷங்கரின் அசிஸ்டன்டாய் இருந்து, அடுத்த படத்தில் நம்மை நடிக்க வைப்பதற்காக இந்த பின் தொடரலோ..?


கொஞ்சம் over தான்.. உங்களுடைய மனக்கு(முற)ரல் எனக்கு கேட்கிறது.. இல்லை இல்லை அப்படி இருக்காது.. அப்படி இருந்திருந்தால் இப்படி இரண்டு மாதம் தொடர்ந்து நம்மை பின் தொடர்ந்திருக்க வேண்டாமே..

ஹ்ம்ம்.. ஒரு வேளை, நான் போதி தர்மனின் கசின் சிஸ்டர் ஆய் 
இருப்பேனோ ..??


இல்லையென்றால் காதல் கீதல் என்று ஏதாவது....??

முதலில் அவன் யாரை பின் தொடர்கிறான் என்று தெரிய வேண்டும்.. என்னையா..?? அல்லது என் தோழியையா..?

இதை உறுதி செய்வதற்காக,என் தோழியை தனியாய் விட்டு விட்டு, அவளுக்கு முன் அலுவகத்தில் இருந்து நான் கிளம்பினேன்.. சரியான ஏமாற்றம் எனக்கு.. அவன் வரவேயில்லை..ஒரு வேளை நான் கிளம்பியதற்கு பின் வந்திருப்பானோ..? நான் சீக்கிரமாய் கிளம்புகிறேன் என்று அவனுக்கு எப்படி தெரியும்..? சரி நாளிக்கு அதையும் சோதித்து விடுவோம் என்று மறுநாள் அவள் கிளம்பியதன் பின் நான் கிளம்பினேன்.. அவனை அன்றும் காண வில்லை..

இப்போது அவன் அவளைத் தேடி தான் தினமும் வருகிறான் என்று ஊர்ஜிதம் ஆனது..இப்போது அவன் யாராய் இருந்தால் எனக்கென்ன என்று தோன்றியது..மறுநாள் அவள் கூட போவதற்கு எனக்கு பிடிக்க வில்லை.. அன்றும் சீக்கிரமாய் கிளம்பினேன்.. எதற்கும் அவன் வந்திருக்கிறானா என்று பார்த்தேன்..அவன் வரவில்லை..எதிர் பார்த்தது சரி தான்.. வீட்டை நோக்கி நடந்தேன்..

இரவு 8:30 மணி இருக்கும்..மார்கழி மாதத்து பனி, என்னை ஜன்னலை மூட சொன்னது.. 

"....!!!!!!!!!!!!! ...." என் முகத்தில் இத்தனை ஆச்சர்யக்குறி..!! சினிமாவில் வரும் ஹீரோ போல அவன் என் வீட்டு  வாசலில் ஒய்யாரமாய் நின்றுக் கொண்டிருந்தான்..ஏன் இன்று சீக்கிரமாய் கிளம்பி வந்து விட்டாய்..? என்ற கோபம் அவன் முகத்தில் இருந்தது.. இத்தனை நாளாய் அவன் என்னை பார்க்கத் தான் வந்திருக்கிறான்.. இல்லையென்றால் இப்படி வீடு தேடி வந்து நிற்பானா..?

ஆனால் இதற்கு பேர் என்ன..? காதலா?? இல்லை மேற்சொன்னவற்றில் ஏதாவது ஒன்றாய் இருக்குமோ..?அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்..ஆனால் இவனை என் வீட்டெதிரே பார்த்ததும் நான் ஏன் இவ்வளவு  சந்ததோஷப்பட வேண்டும்..?

அன்றிலிருந்து நான் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு செல்லும் போது என் தோழியை கூப்பிடுவது இல்லை.. :P 

பேச ஆரம்பித்தோம்..பழக ஆரம்பித்தோம்..எல்லா காதலர்களையும் போல பார்க் ,பீச் என்று ஊர் சுத்த ஆரம்பிதோம்.. நிறைய விஷயங்கள் பகிர்ந்துக்க ஆரம்பித்தோம்..ஒன்றாய் பேசிக் கொண்டே வெகுதூரம் நடக்க ஆரம்பித்தோம்..என்ன கஷ்டம் வந்தாலும் அவனிடம் பகிர்ந்துக் கொண்டால் மனசு லேசாகி விடும்..இப்படியே ஆறுமாத காலம் ஓடிற்று..

இப்போது..

கிட்டத்தட்ட அலுவலகத்தில் இருந்து அனைவரும் கிளம்பி விட்டனர்..ஆனால் அவனை இன்னும் காண வில்லை..  வீட்டிலிருந்து வேற, இரண்டு முறை அழைப்பு வந்து விட்டது.. .எவ்வளவு நேரம் தான் இன்னும் காத்திருப்பது..? வருவானா..? மாட்டானா? ஒரு தகவலும் இல்லையே.. வரட்டும்..இந்த முறை எத்தனை தடவை சமாதானம் படுத்தினாலும்,சமாதானம் ஆவதில்லை..என்று நினைத்துக் கொண்டே வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்..

ஆனாலும் அவன் வராததற்கான காரணம் என்னவாக இருக்கும்..?? ஏன் அவன் இன்று வர வில்லை..??

ஒரு வேளை இன்று அமாவாசையாக இருக்குமோ...???




(பி-கு: முன்னர் எழுத பட்ட கதைகளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை..
அந்த தொலைந்து போன காதலன் யாரென்று அறிய comment-களை படிக்கவும்)

அன்புடன்,
தர்ஷினி.