Pages

Monday 21 November 2011

எனக்குள்ளே....

தனிமையை விரும்பாத, ஆனால் தனித்து விடப்பட்ட வாழ்க்கை பாதையில், ஒரு வழிப்போக்கன் நான்.. போய் சேருகிற இடம் தெரியாது.. ஆனால் போய் கொண்டிருக்கிற பாதை மட்டும் தெரியும்.. அது எப்படி..?

        கடலில் மிதக்கும் கப்பலுக்கு கலங்கரை விளக்கு வழி காட்டுமாம்.. அதே போலத் தான் எனக்குள்ளும் ஒரு கலங்கரை விளக்கு இருக்கிறது.. இல்லை.. இல்லை.. ஒன்பது கலங்கரை விளக்குகள்  இருக்கின்றன  என்று சொன்னால் இன்னும் சரியாய் இருக்கும்..

தனித்து விடபட்டிருந்தாலும், கற்களும் முற்களும்  நிறைந்திருந்த என் பாதையில், இரத்தினக் கம்பளத்தையும்  பூக்களையும் தூவியவை இந்த கலங்கரை விளக்குகள்  தான்..

யார் இந்த கலங்கரை விளக்குகள்..??

வாருங்கள், என்னுடைய தனித்து விடப்பட்ட இந்தப்  பாதையில்  சேர்ந்து பயணிக்கலாம்..

அப்போது நான் கல்லூரி  மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன்.. கல்லூரி வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் close friend, best friend, hi friend, bye friend, girl friend, boy friend இன்னும் variety variety ஆக நண்பர்கள் இருப்பார்கள்..ஆனால் எனக்கு எல்லாமே அவள் தான்..

அவள் பெயர் ரஞ்சனி.. சாமார்த்திய சாலி.. அழகான கண்கள், ஆழமான பார்வை ,கூர்மையான மூக்கு, தைரியசாலி.. துரு துரு பொண்ணு.. வாழ்க்கையை எப்போதும் சந்தோஷாமாக வாழ்வதும்,கலகலப்பாய் இருப்பதும், கலாட்டா பண்ணுவதும் இவள் வாடிக்கை..வாழ்க்கையின் எந்த தருணத்திலும் centiment ஐ பார்த்திராத இருபதாம் நூற்றாண்டின் modern மங்கை இவள்..

மேலோட்டமாய் பார்க்க இருவரும் ஒரே குணாதிசியங்கள் கொண்டவர்களாய்  தான் தெரிவோம்..ஆனால் உண்மை அதுவல்ல..  அவளுக்கு enjoy பண்ண யாராது நான்கு பேர் கூட இருந்தால் போதும்.. ஆனால் எனக்கோ ரஞ்சனி வேண்டும்..

ரஞ்சனி வரலையா..? நானும் வரலை.. அவள் ஊருக்கு போகலையா..?? அவளை தனியா விட்டு விட்டு நான் மட்டும் ஊருக்கு போகனுமா?? என்று விடுதியிலேயே விடுமுறை நாட்களை கழித்தவள் நான்..

இவையெல்லாம் ரொம்ப நாள் நீடிக்க வில்லை.. நல்ல நண்பர்களுக்கிடையே விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லா விட்டால் எதற்கெடுத்தாலும் சண்டை தான்..

எத்தனை முறை தான் நானே விட்டு கொடுப்பது என்று ஒரு சண்டை..

போன முறை நான் தானே adjust பண்ணி போனேன்.. இந்த முறை நீ பன்றதுகென்ன..? இப்படி ஓர் சண்டை..

இதற்கெல்லாம் விட, கொஞ்சம் சகஜமாக இன்னொருத்தரிடம் நட்பாக  பழகி விட்டால் போதும்.. அதுவும் அந்த இன்னொருத்தர் எதிர்பாலாக(ஆண்/பெண்) இருந்து விட்டால் சொல்லவே வேண்டாம்..

நமக்கே நமக்கு என்றிருக்கும் உயிர் தோழி, நம்மை விட்டு பிரிந்து விடுவாளோ என்கிற  பயம் தான்  இவையனைத்திற்கும் காரணம்..

ஆம், இந்த பயம் தான் என்னையும் ரஞ்சனியையும் பிரித்தது..ஆனால் ரஞ்சனி முகத்தில் மட்டும் சிரிப்பு என்றைக்குமே மாற வில்லை.நானோ தாடி வைக்காத குறை தான்.. பெண்ணாய் போய் விட்டேனே..

என்ன தான் நெருங்கிய நண்பர்களாய் இருந்தாலும், ஒரு குறுகிய இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சகஜமாக பேசுவது கடினம் தானே...!

நாங்கள் இருவரும் சேர்ந்து அமர்ந்து படித்த எங்களது விடுதியின் தொலைக்காட்சி அரங்கத்திலேயே வெகு நேரம் அமர்ந்து எங்கள் நட்பின் பொன்னான நினைவுகளை நினைத்து பார்த்துக் கொண்டே இருப்பேன்..சில நேரம் நான் தான் தப்பு செய்து விட்டேனோ என்று தோன்றும்..அவ்வாறு தோணும் தருணங்களில், அவளிடம் போய் மன்னிப்பு கேட்குமாறு மனசாட்சி வற்புறுத்தும்..

நானும் ஒரு நாள் போனேன்..

"சீ.. நான் நிம்மதியா இருக்கிறது உனக்கு புடிக்கலையா?" என்று ரஞ்சனி..

ஊருக்கு போகும் போது விடுதி வாசல் வரை வழியனுப்பி விட்டது.. கொஞ்ச தூரம் போனதும், சாப்பிட்டு  விட்டு போ..தண்ணி எடுத்துகிட்டயா? என்று கேட்பது.. எழுந்தவுடன் குறுஞ்செய்தியில் Good Morning சொல்வது.. காலையில் அனுப்பிய Good Morning குறுஞ்செய்தியில் எங்கே smiley ஐ காணோம் என்று உரிமையோடு சண்டை போடுவது..Miss you சொல்வது..தேர்வுக்கு முன்னர் all the best சொல்வது..ஜோடியாக நடனம் ஆடியது..ஒன்றாக படித்தது.. படம் பார்த்தது..செல்லப் பெயர் வைத்து கூப்பிட்டது.. ஒன்றாக கொண்டாடிய பிறந்த நாட்கள்..பிறந்த நாள் பரிசுகள்..

இப்படி எதையுமே மறக்க முடியாமல் மீண்டும் அதே அரங்கத்தில் நான்..

கண்களில் கண்ணீருடன்..


ஆனால் அன்று எனக்கு தெரியவில்லை.. அது தான் நான் அழுகும் கடைசி கண்ணீர் துளிகள் என்று...........

நிஜமாக நான் இந்த தருணத்தில் ரஞ்சனிக்கு மனதார நன்றி சொல்லியே தீர வேண்டும்.. தனித்து விடப்பட்டப் பாதையில் தற்போது பயணித்துக் கொண்டிருக்கும் எனக்கு வழிகாட்ட ஒன்பது கலங்கரை விளக்குகளை கொடுத்ததற்கு..

ரொம்ப பெருமை வேண்டாம் ரஞ்சனி..

நீ கொடுக்கவில்லை..

உன் பிரிவு எனக்கு கொடுத்த பரிசு....

யாரந்த கலங்கரை விளக்குகள்...??? தொடர்ந்து பயணியுங்கள்...!!!!


அன்புடன்,
தர்ஷினி.


24 comments:

  1. pazhai ninaivugal innisai paadugiratho? nalla ezhithirukka! Screenplay nallaruku pola :P :P

    ReplyDelete
  2. Really everyone will feel this type of feeling and cant able escape from that. Anyway we have to continue our life cycle and surely urs is provided with lot of adventurous thing which makes u more interesting and that day ur friend will feel proud about you............ from whr thy r.

    ReplyDelete
  3. பெண்களுக்கு ஆண்கள் "Choose the best"....!

    ஆண்களுக்கு பெண்கள் "இவளே Best".

    உன் வாழ்வின் நட்சத்திரம் என்று அவளை நீ எண்ணியது தவறு.

    ஆவள் வெறும் வால் நட்சத்திரம் தான்.

    இந்த கலங்கரை விளக்கமே, உனக்கு வெளிச்சம் தரும் ஒரு திசை காட்டி.

    Grow Up...!

    ReplyDelete
  4. எழுத்துப் பிழை இல்லாமல் எழுதியதற்கு வாழ்த்துக்கள் ப்ரியா,இணையத்தில் நல்ல தமிழ் படிக்கிறதே ரொம்ப அரிதா இருக்கு.
    நான் படித்த வரை, பெண் - பெண் நட்பு, எதிலுமே அதிகம் எழுதப்படாத ஒரு களம். முதல் கதையாவே அதை எடுத்திருக்க. நல்லா இருக்கு படிக்க, தொடர்ந்து எழுது.
    கலங்கரை விளக்கங்களைத் தேடி பயணிக்க நானும் தயார் :)

    ReplyDelete
  5. மிகவும் நன்றாக உள்ளது! தொடர்ந்து எழுதவும்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. படிக்கவே ரொம்ப சுவாரசியமா இருக்கு, way of writing is good...:)Content பத்தி சொல்லனும்ன, உன்னோட first blog லையே அவள பத்தி எழுதீருக்க,that proves ur friendship on her,irrespective of whatever happened between u both...:)..Keep writing:) and waiting for the next one de..:)

    ReplyDelete
  7. Nice work Priya. You have used the language well. All the best for your future endeavours.

    ReplyDelete
  8. sema ya eluthirkenga ka...............ennakuley suitable heading...........ungalukula irukaratha kotirkengaaaaaaaaaaa...........chance less writing.......am egarly waiting for the next one ka..............

    ReplyDelete
  9. தங்களது விமர்சனங்களுக்கு, எனது மனமார்ந்த நன்றிகள்.. தொடர்ந்து பயணிக்கவும்..

    கலங்கரை விளக்கு விரைவில் வெளியேறும்.. :-)

    ReplyDelete
  10. naa xpect paanave illa neenga ivlo nalla eluthuveenga nu...... ellathayum oru sequence ah sollirukura vitham rmba nalla iruku ka.... xcellent work.... unga adutha padaipukku kaathirukiren..... n ALL THE BEST!!!!!!!!!!!!

    ReplyDelete
  11. Really awesome lines d...itha padikkumpodhu ovvotharukum avanga friends oda nadanda malarnda,marakamudiyada santhosham ana thanurunam,vedanai patta tharunam ellame nyabagathuku varum nu nenakiren...ennakum apdidhan...great sama talent po...

    ReplyDelete
  12. Good start :) You write very good tamil :) I love the way you write.. Lets see how u proceed :)

    ReplyDelete
  13. Wonderful writing with a good feel........ athuvum friendship pathi eduthu ezhdhiruka.... very good writing.... padika padika, colg life malarum ninaivugal pola, kannu munnala vandhu nikudhu....

    Continue writing... Eager to see the other lights to come out.... :-)

    ReplyDelete
  14. really nice story.. i loved alot... I am eagerly waiting for ur next post... Congrats dear.!!!!!

    ReplyDelete
  15. romba nalla irukku di..ellarum ethavathu oru nerathil nadanthu irukkum...even for me.. touching lines..well said!! Keep going.. :)

    ReplyDelete
  16. உன் பிரிவு எனக்கு கொடுத்த பரிசு... punch superb:) நீண்ட தூரம் பயணம் செய்ய நான் தயார்:):)

    ReplyDelete
  17. chanceless..semaya ezhudirukinga...:)keep going:)
    eagerly waiting fot the next:)

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. முதல் முயற்சியே மிகவும் அருமை!!!!! உன் எழுத்துகளின் ஆட்சி தொடர வாழ்த்துகள்...:-)கலங்கரை விளக்குகள் யார் யார் என அறியும் ஆவலுடன்

    உன் அன்பு சகோதரி

    ReplyDelete
  20. awesome post ka..:)
    continue writing..
    waitin fr ur next post!:-)

    ReplyDelete
  21. nice ka.. keep rocking;)

    ReplyDelete
  22. நமக்கே நமக்கு என்றிருக்கும் உயிர் தோழி, நம்மை விட்டு பிரிந்து விடுவாளோ என்கிற பயம் தான் இவையனைத்திற்கும் காரணம்..

    ஆம், இந்த பயம் தான் என்னையும் ரஞ்சனியையும் பிரித்தது..ஆனால் ரஞ்சனி முகத்தில் மட்டும் சிரிப்பு என்றைக்குமே மாற வில்லை.நானோ தாடி வைக்காத குறை தான்.. பெண்ணாய் போய் விட்டேனே..

    super.... :):) ivlo nala ezuthuva nu ipotan theriuthu... All d best.. Romba nalaruku

    ReplyDelete